தமிழில் வழிபடுவோம், தமிழ் வழிப்படுவோம். 150 இருக்கைகள் கொண்ட மண்டபம் வாடகைக்கு விடப்படும். உங்கள் சிறிய வைபவங்களையும் மற்றும் மலிவு விற்பனைகளையும் இங்கே நடாத்தலாம்.
காலமற்ற தோன்றாப் பெருமையன் “ஞானலிங்கேச்சுரன்” சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான “சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு” கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
So போட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மதிப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு வலயரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதழும் பேர்ன் மாநிலத்தில் நடைபெறும் “சைவமும் தமிழும் 2016 விழாவில்” வழங்கப்படும். Also விழா நடைபெறும் காலம், இடம் என்பன போட்டி நுழைவுக் கடிதத்துடன் அனுப்பிவைக்கப்படும். So போட்டி நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும். மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இது வழிசெய்யும். அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க அன்புடன்; அழைக்கின்றோம்.