Anchali Finanz GmbH
Anchali Finanz GmbH
அஞ்சலி பற்றி
உங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய Anchali Finanz GmbH அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் மேலதிக விபரத்தை கேட்டறியவும்.
இப்படிக்கு
அஞ்சலி பினான்ஸ் நிர்வாகம்
கடன் திட்டம்
அஞ்சலி பினான்ஸ்சின் இலகுவான வங்கிக்கடன் வழங்கும் திட்டம்
1. வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை
வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உங்களின் வதிவிட அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்றையும் (B,C & CH-Nationality) மற்றும் கடைசி மாத சம்பளப்பட்டியலையுமினைத்து எமக்கு பக்ஸ்(FAX) அல்லது தபால் (POST) மூலம் அனுப்பி வைக்கவும். (குறிப்பு: மாதச் சம்பளமாயின் ஒரு மாதச் சம்;பளப்பட்டியல், மணித்தியாளச் சம்பளமாயின் கடந்த மூன்று மாதச் சம்பளப்பட்டியல்).
2. வங்கிக்கடனாக பெறவிரும்பும் தொகை
வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் கடனாக பெறவிரும்பும் தொகையை எம்மிடம் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தும் நிலையில் அஞ்சலி பினான்ஸ்; உங்களின் சம்பளத்திற்கு ஏற்ற வகையில் மிகக்கூடுதலான வங்கிக்கடனை பெற்றுத்தர ஏற்பாடு செய்யும். (குறிப்பாக அஞ்சலி பினான்ஸ் இன்று வரை தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு எவ்வளவு மிகக்கூடுதலான வங்கிக்கடன் பெறமுடியுமோ அத்தொகையையே பெற்றுக்கொடுத்துள்ளது).
3. வட்டிவீதம்
சுவிஸ்சில் வங்கிக்கடன் வழங்கும் வங்கிகளின் வட்டிவீதங்கள் 8.95% முதல் 9.95% வரை ஆகும் ,இவ்வட்டிவீதங்களுக்கும் குறைவாக விளம்பரம் செய்யும் முகவர்களிடம் தயவு செய்து உங்கள் வங்கிக்கடன் விண்ணப்ப பத்திரங்களை கொடுப்பதற்கு முன்னர் வட்டிவீதத்தை உறுதி செய்து கொள்ளவும். மேல் குறிப்பிட்ட வட்டிவீதங்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொள்ளவும்.
4. வங்கிக்கடனை புதுப்பித்தல்
நீங்கள் முன்னர் எம்மிடம் வங்கிக்கடன் பெற்று சில மாதங்கள் செலுத்தியிருந்தால் அக்கடனை மீண்டும் புதுப்பித்து மேலதிக வங்கிக்கடனை பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் வேறு யாரிடமும் வங்கிக்கடனுக்கு விண்ணபித்து நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தால், உதாரணமாக உங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில் நீங்கள் விண்ணபித்த வங்கி உங்களுக்கு மிகக்கூடுதலான வங்கிக்கடனை வழங்க முன்வராத நிலையில் நீங்கள் அக்கடனை அஞ்சலி பினான்ஸ்சின் மூலம் புதுப்பித்து மேலதிக பணத்தை பெறுதல் அல்லது வங்கிக்கடனை மீளப்புதுப்பித்தல் பற்றி ஆலோசனை கேட்டல்.
இப்படிக்கு
அஞ்சலி பினான்ஸ் நிர்வாகம். Anchali Finanz GmbH
மாற்றங்கள்
2003 முதல் வங்கிக்கடன் பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
2003 முதல் சுவிஸ் மத்திய அரசினால் வங்கிக்கடனுக்கு புதிய சட்டவிதிகள் அமுல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டமானது வருமானம் குறைந்தவர்களுக்கு பெருந்தொகை வங்கிக்கடனை வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வருடம் முதல் வங்கிக்கடனுக்கு அமுல் செய்யப்பட்டுள்ள சட்டவிதிகளின் சிறிய விளக்கம் பின்வருமாறு. இச்சட்டத்தின் மேலதிக விளக்கம் தேவையெனில் தயவு செய்து அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொள்ளவும்
• வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவரின் மாத சம்பளத்தில் கையில் கிடைக்கும் தொகையில் (Nettolohn) அடிப்படைச் செலவுகள், வீட்டுவாடகை, மருத்துவக் காப்புறுதி மற்றும் பிள்ளைகளின் செலவுகள் (பிள்ளைகளின் செலவுகள் அவர்களின் பிறந்த ஆண்டின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டுள்ளது) போக மிகுதியாகவுள்ள தொகையின் 36 மடங்குகள் வங்கிக்கடனாக பெறமுடியும். (உதாரணமாக மிகுதி தொகை 800.00 சுவிஸ் பிராங்காக இருப்பின் அதன் 36 மடங்குகள் 28800.00 சுவிஸ் பிராங் ஆகும்).
• அவ்வாறு 36 மடங்குகள் கணிப்பிடப்படும் தொகையானது முதலும் வட்டியுமாகும்
• வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை முடிவு செய்யலாம்.
• திருப்பிச் செலுத்தும் காலத்தை ஐந்து வருடமாக முடிவு செய்யும் போது கையில் கிடைக்கும் முதலின் தொகை குறைவடையாது.
• மாதாந்தம் திருப்பிச் செலுத்தும் தொகை மிகுதி தொகையிலும் கூடுதலாக இருக்க கூடாது (உதாரணமாக மிகுதி தொகை 800.00 சுவிஸ் பிராங்காயின் திருப்பிச் செலுத்தும் தொகை அதற்குட்பட்டதாக இருக்க வேண்டும்).
• வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவரின் விண்ணப்பம் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு வங்கிக்கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட திகதியை விடுத்து மறு நாளிலிருந்து பதின்நான்கு (14) நாட்களின் பின்னரே பணம் பெறமுடியும். (01.01.2016 இலிருந்து நடைமுறையிலுள்ளது)
அதனால் உங்கள் வங்கிக்கடன் விண்ணப்பங்களை சுவிஸ்சில் சிறந்த முறையிலும், அனுபவரீதியிலும் செயற்படும் அஞ்சலி பினான்ஸ்சிடம் விண்ணப்பித்து பெருந்தொகை பணத்தை குறைந்த வட்டி வீதத்தில் பெறுவதற்கு முயற்சி செய்யவும்.
இப்படிக்கு
அஞ்சலி பினான்ஸ் நிர்வாகம் Anchali Finanz GmbH
தொடர்புகள்
Anchali Finanz GmbH
Buchenweg 6
CH-4554 Etziken / SO
Tel.: +41 (0)32 614 40 51 Fax: +41 (0)32 614 40 64
Natel: +41 (0)79 302 56 67
e-mail: info@anchali.com